விளாத்திகுளம் வட்டம், வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலயத்தின் 7-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமைக் செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அந்தோணி ரவி, பொருளாளர் அந்தோணி சேகர், செயலாளர் லூயிஸ், மாவட்ட பிரதிநிதி செந்தூர்ப்பாண்டியன், வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அந்தோனிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்பரோமீனாமேரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, கிளைச் செயலாளர்கள் வன்னியராஜ், நல்லமுத்து, சேவியர், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாயாண்டி, ஒன்றிய வர்த்தக அணி அருள்பிரகாஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சவேரிய ஆரோக்கியராஜ், மாணவரணி ரூபன் ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திருவிழாவை ஒட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பக்தர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண்டு ரசிக்கும் வகையில் அமைந்தது.