அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உரைகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் நிறைவாக, கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.