தூத்துக்குடியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை துவக்க விழா வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் அருட்சகோதரி பாத்திமா லூயிஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம்.எஸ். ரூபா மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.டி. மதுரவள்ளி ஆகியோர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பி.ஜே. அலாய் டொமினிக் சுபாஷ் கலந்து கொண்டு மாணவர் பேரவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவை மனப்பான்மையின் அவசியம் குறித்து ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்வியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி, சமூக மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாணவர்களின் தலைமைத்துவ திறன், பொது பொறுப்பு உணர்வு மற்றும் சமூக அக்கறையை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது. முடிவில் நன்றியுரையுடன் மாணவர் பேரவை துவக்க விழா இனிதே நிறைவுற்றது.