தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிப் பொருட்கள் பதிவு முகாம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.

முகாம் நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பொதுமக்கள் இதனை புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.