தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அவசர நிவாரணப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.

சக்தி ஸ்டூடியோவில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்வதற்காக சரள் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாண்டியபுரம் பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அ. சண்முகபுரம், மாதா நகர், கே.வி.கே.சாமி நகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டு, மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும் பள்ளமான சாலைகளில் சரள் அடித்து பயணத்துக்கு வசதி செய்யவும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாப்பிளையூரணி ஊராட்சியில் மழைநீர் தேக்கம் மற்றும் சாலை பள்ளங்களை சரிசெய்வதற்கான பணிகள் முழுமையாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.