இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கி ஊழியர் சங்கமான ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ, ஜிஐசி உள்ளிட்ட அமைப்புகள், இன்சூரன்ஸ் முகவர்கள், முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பென்சன்தாரர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கோட்டச்சங்க இணைச் செயலாளர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார். பிஇஎப்ஐ சார்பில் தங்கமாரியப்பன், ஏஐபிஇஏ சார்பில் கிருஷ்ணமூர்த்தி, எல்.ஐ.சி பென்சனர் சங்கம் சார்பில் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றி, இன்சூரன்ஸ் துறையை முழுமையாக அன்னிய முதலீட்டிற்கு திறப்பது பொதுத்துறை நிறுவனங்களின் நலனுக்கும், ஊழியர்களின் உரிமைகளுக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எதிரானது என சுட்டிக்காட்டினர்.
சிஐடியு மாநில துணைத் தலைவர் ரசல் நிறைவுரையாற்றி, இந்த மசோதாவை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார். மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.
தூத்துக்குடி
இன்சூரன்ஸ் துறையில் 100% அன்னிய மூலதனம் – மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வங்கி–இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலய 7-ம் ஆண்டு திருவிழா: விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடக்கம்!!
அடுத்த
25 ஆண்டுகால பத்திரிகையாளர்களின் கனவு – முதல்வர் ஸ்டாலின் வருகையில் நிறைவேறுமா?
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026
இம்மானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
09 Oct 2026
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம்!!
09 Oct 2026