அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அ.ம.மு.க., எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
எந்த தீய சக்தியை வீழ்த்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் போராடினாரோ அதே தீய சக்திகள் உடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் துரோக கும்பலை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தி.மு.க., மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்க்கிறது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பது என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை.
திமுக அரசை வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டிய காலமும், நேரமும், நெருங்கி விட்டது.
நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி திமுகவை வீழ்த்திடுவோம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசியல்
திமுக அரசை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டிய காலமும், நேரமும், நெருங்கிவிட்டது - டிடிவி தினகரன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது - வேளாண் பட்ஜெட் வெறும் காகிதக்குவியல்!!
அடுத்த
தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா - சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: “6 மாதம் கழித்துதான் கேள்வி கேட்க வேண்டுமா?” – முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கேள்வி?
02 Jun 2026
சால்ட் காலனி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!!
16 Apr 2026
“உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக ஆதரவு சேகரிப்பு – கீதா ஜீவனுக்கு பெண்கள் ஆரத்தி வரவேற்பு!”
08 Apr 2026
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு!!
05 Apr 2026