திமுக அரசின் ஐந்தாவது வேளாண் பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 2022 - 23ல் தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்றனர். இந்த பட்ஜெட்டில் 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியுள்ளனர். சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதை மறைக்க 2019 - 2020 சாகுபடி பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். 


விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக., அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியிலே தவிர, வேறொன்றும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.