தூத்துக்குடி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் எதிரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இம்மாதம் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டதன் மூலம், தூத்துக்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரம் மேலும் வேகமடையும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.