தூத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு சால்ட் காலனி CGE காலனி 1 மற்றும் 2ஆம் தெருக்களில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கீதா ஜீவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் T.A. மகேஷ்வரன்சிங் (சுற்றுச்சூழல் அணி மாநகர துணை அமைப்பாளர்), ராமோகன், ரெக்ஸ், ஜெய்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மகளிர் அணியினருடன் இணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, கீதா ஜீவனுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.