தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஆதித்தமிழர் புரட்சி கழகத்தின் சார்பில், பாபாசாகீப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில், நிறுவனர் தலைவர் புலி.செ. இளவரச பாண்டியன் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.
அம்பேத்கர் அவர்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்த சிந்தனைகளை போற்றியும், அவற்றை சமூகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நிகழ்வில் வலியுறுத்தினர்.