தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆயர் இல்ல இளையோர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் நெல்லை தேவன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து அல்பர்ட் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியை செய்யது முஹம்மது ஷரீப் தொகுத்து வழங்கினார். விழாவில் முனைவர் இளங்குமரன் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர், தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன் தொடுவானம் இலக்கியச் சுடர் விருதைப் பெற்று ஏற்புரை வழங்கினார்.
அதேபோல், ராஜபாளையத்தைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ராஜேஸ்வரி கோதண்டம் தொடுவானம் கலைச்சுடர் விருதைப் பெற்று நன்றியுரை நிகழ்த்தினார். ராஜா புதுக்குடியைச் சேர்ந்த மாரியம்மாள், ஸ்டார் கிராமியக் கலைக் குழு நிறுவனர், விருது பெற்று உரையாற்றினார். தொடர்ந்து துரை கனேசன், புலவர் சங்கரலிங்கம், கவிஞர் செல்வராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக பத்மநாதன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் மாரிமுத்து, பெஞ்சமின் அடிகளார், சாந்தி பிரபு, சாந்தி, லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.