தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் முனைவர் கே.பி. ராஜா ஸ்டாலின், தூத்துக்குடி முன்னாள் தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததற்காக பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.


தவெக கட்சியின் தூத்துக்குடி நிர்வாகியாக இருந்து, அக்கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த அஜிதா ஆக்னல், தற்போதைய அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனை முன்னிட்டு, கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து, மாவட்டச் செயலாளர் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி. கான்ஸ்டன்ட் ரவீந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் திமுக, தமிழகத்தில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என ராஜா ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கழக முன்னோடி புதுக்கோட்டை ஜெபமணி ஜெபக்குமார் உடன் இருந்தார்.