மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் பி. கீதா ஜீவன், இன்று மாலை நடைபெற்ற வீடு வீடான வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் உற்சாகமாக ஈடுபட்டார்.
மாலை 5.00 மணி அளவில் தொடங்கிய இந்த பிரச்சாரம், தூத்துக்குடி மாநகரின் 6வது வார்டு முழுவதும் மற்றும் 11, 12, 21வது வார்டுகளின் விடுபட்ட பகுதிகளில் நடைபெற்றது. 11வது வார்டில் இன்னாசியார்புரம் 1, 2, 3 தெருக்கள், கந்தசாமிபுரம், சக்தி விநாயகர் புரம் 5வது தெரு ஆகிய இடங்களிலும், 21வது வார்டில் சுந்தர் ராமாபுரம் 1, 2, 3 தெருக்கள், அழகேசபுரம் 1, 2 தெருக்கள் ஆகிய பகுதிகளிலும், 12வது வார்டில் ஸ்டேட் பேங்க் காலனி 2வது தெரு, கோமதிபாய் காலனி 1 மற்றும் 2வது தெருக்களிலும் அவர் நேரடியாக சென்று மக்களிடம் வாக்குகள் கேட்டார்.
பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். “உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பிரச்சாரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.