தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சி.த. செல்லப்பாண்டியன், இன்று தூத்துக்குடி பழைய துறைமுகம் எதிரே அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை சார் ஆட்சியர் பிரபுவிடம் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பிஜேபி விவேகம் ரமேஷ், அமமுக ஜானியேல் சாலமோன் மணிராஜ், அதிமுக நிர்வாகிகள் சின்னத்துரை, சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது கூட்டணி கட்சித் தொண்டர்கள் திரளாகக் கூடினர். தேர்தல் சூழ்நிலை சூடுபிடித்துள்ள நிலையில், சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தது தூத்துக்குடி அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.