தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கீதாஜீவன், நேற்று (04.04.2026) மாநகரத்தின் 53 மற்றும் 54வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தோப்புத் தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, முஸ்லிம் தெரு, காளியம்மன் கோவில் தெரு, அய்யன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்களுடன் நேரடியாக உரையாடிய அவர், உள்ளூர் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், தீர்வு காண உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏ.பி.சி.வி. சண்முகம், சகாயராஜ், தனலட்சுமி, தயாள லிங்கம், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர். மேலும், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதிச் செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், வட்டச் செயலாளர் மனோகரன், மாநகர மகளிர் அணி ஜெயக்கனி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மக்கள் மத்தியில் நேரடி தொடர்பு கொண்டு நடைபெற்ற இந்த பிரச்சாரம், கூட்டணிக்கான ஆதரவை வலுப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.