திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி திமுக சார்பில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரம் அண்ணா நகர் பகுதி திமுக சார்பில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாளையொட்டி திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டமானது டூவிபுரம் 5 வது தெருவில் வைத்து இன்று (15.03.2025) மாலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
மாநில தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர் சரத் பாலா, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட திமுக ஆறுமுகம், செல்வராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி, போல் பேட்டை பகுதி திமுக ஜெயக்குமார், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் இருநூறு என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
