தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம், உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா யொட்டி தூத்துக்குடியில் இன்று (16.03.2025) காலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சாதனை படைத்த பெண்களுக்கு சாதனையாளர் விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு எச்.எம்.எஸ்., மாவட்ட தலைவர், தூத்துக்குடி பிராந்திய ஆலோசனை குழு உறுப்பினரும், தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம், மாவட்ட தொழிலாளர் நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர், உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தேசிய தலைவர் டாக்டர். ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பெஸி நிர்மல் வரவேற்புரை நிகழ்த்தினார். மகப்பேறு மருத்துவரும், லயன்ஸ் கிளப் கவர்னருமான டாக்டர். ஆதிலட்சுமி குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

எச்.எம்.எஸ்., தமிழ் மாநில பொதுச் செயலாளரும் தேசிய தலைவரும், தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்க தலைவரும், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவரும், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் பேரவை துணைத் தலைவருமான, ராஜா ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்.

சுப்பிரமணியன், சுப்ரமணிய பிள்ளை, ரபிக், கீதா ஐயர், துறைமுகம் சத்யா, ஜான் கென்னடி, காந்தி சேகர், ஷாஜஹான், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

கலாலெட்சுமி, ஷோபா ஜென்சி, கலைச்செல்வி, விஜயலட்சுமி, மகேஸ்வரி, யாதவராணி, ராஜம், ஜெனிட்டா ராஜ்குமார், துரைசெல்வி, ரம்சானா, ஆகிய சாதனைப் பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திவாகர், பிரகாஷ், வைட் பீல்ட், ஜெயம், அசோக் குமார், பேச்சிமுத்து, தர்மசீலன், மணிகண்ட ராஜா, ராமகிருஷ்ணன், வினோத், முத்துக்கருப்பன், பிரித்விராஜ், மனோகரன், சந்தானகிருஷ்ணன், ஜெய கண்ணன், கண்ணன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கலை வளர்மணி கலை பேராசிரியர் முனைவர். சகா.மா.சங்கர்., சகா கலை குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு எச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராதா ஆனந்தராஜ் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் எச்.எம்.எஸ்., பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.