தூத்துக்குடியில் தேவேந்திர ராஜா தாக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியார் தலைமையில் நடைபெற்றது.

திருவைகுண்டம் பள்ளி மாணவர் தேவேந்திர ராஜா கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்து நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்பாட்டமானது தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (16.03.2025) மாலை புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும், கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் தலைமையில்,  தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினரும், தென்னாட்டு சாம்பவர், ஒருங்கிணைப்பாளருமான குட்டி பாண்டியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் பரணிமாரி, மாநில துணை செயலாளர் முருகேசன், மூத்த போராளி, காமராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சிவனைந்த பெருமாள், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட மகளிரணி செயலாளர் ரேவதி, விருதுநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா, உட்பட புரட்சி பாரதம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மண்டல, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.