தூத்துக்குடியில் இன்று (16.03.2025) மாலை பால விநாயகர் கோயில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டலில்  வைத்து பாரத ரத்னா, புரட்சி தலைவி எம்.ஜி.ஆரின்., பிறந்தநாள் விழாவையொட்டி மூத்த எம்.ஜி.ஆர்., ரசிகர் மற்றும் கழக நிர்வாகிகளை கௌரவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எம்.ஜி.ஆர்., ரசிகர் சக்தியா லெட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் விஜயராகவன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த எம்.ஜி.ஆர்., ரசிகர் மற்றும் கழக நிர்வாகிகளை கௌரவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.