தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜா பங்கேற்ற கபடி போட்டியில் தேவேந்திர ராஜா அணி வெற்றி பெற்றது என்ற‌ காரணத்திற்காக கடந்த 10 ஆம் சாதிவெறி கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட பள்ளி மாணவன் ராஜா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துக் வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகரில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும், கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் தலைமையில், மாவட்ட செயலாளரும், ஊராட்சி மன்ற  உறுப்பினரும், தென்னாட்டு சாம்பவர் ஒருங்கிணைப்பாளருமான குட்டி பாண்டியன் முன்னிலையில், நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தை தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜாவை புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும், கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தனது வருத்தங்களை தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.

சந்திப்பின் போது முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் பரணிமாரி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.