தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வள்ளிநாயகபுரத்தை சார்ந்த பன்னீர் மகன் முகிலேஷ் என்ற குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முகிலேஷ் என்ற குழந்தைக்கு ஓ பாசிடிவ் இரத்தம் ஆறு யூனிட் தேவைப்படுவதாக புதுக்கோட்டை மரம் வரம் நிர்வாக இயக்குநர் இராம்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

மரம் வரம் என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு விதமான சமூக பணி, மற்றும் தொண்டுகள் செய்து கொண்டு இருக்கும் நிர்வாக இயக்குநர் இராம் உடனடியாக 5 குருதி கொடையாளர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் அழைத்து சென்று அவர்களோடு மரம் வரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இராமும் தங்களது குருதிகளை தானமாக வழங்கி குழந்தையின் மேல் சிகிச்சைக்கு பெரிதும் உதவினார்கள்.

குருதிகளை கொடையாக வழங்கிய விளாத்திகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் செந்தில்குமார், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி சார்ந்த செந்தில்குமார், புதுக்கோட்டை தங்கதுரை, வாசன் ஐ கேர் பவுண்டேஷன் நாராயணன், ஆகியோரின் செயலை பாராட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனை  இரத்த வங்கி மேலாளர் சாந்தி, முன்னாள் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல செயல்களை மரம் வரம் அறக்கட்டளை செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்கள். உடன் மரம் வரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இராம் உடன் இருந்தார்.