Breaking News

சத்யா கோப்பை அகில இந்திய கைப்பந்து போட்டி: பெண்கள் பிரிவில் ஈஸ்டர்ன் ரயில்வே, ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி வெற்றி!!

  • Share on

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 27-வது ஆண்டு சத்யா கோப்பைக்கான அகில இந்திய மின்னொளி கைப்பந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் பெண்கள் பிரிவில் கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணியும், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.


தூத்துக்குடி சத்யா விளையாட்டு மற்றும் உடற்கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளை வ.உ.சி. கல்விக் குழும செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் மற்றும் தூத்துக்குடி துறைமுக விஜிலன்ஸ் அதிகாரி கவின் மகாராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கேரளாவின் எம்.ஜி. பல்கலைக்கழக அணியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) சென்னை அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரள எம்.ஜி. பல்கலைக்கழக அணி 25-21, 25-20, 17-25, 25-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.


அடுத்து நடைபெற்ற மற்றொரு பெண்கள் பிரிவு ஆட்டத்தில் கேரள போலீஸ் அணியும், கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணியும் மோதின. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்டர்ன் ரயில்வே அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.


இந்த போட்டிகளை காண கைப்பந்து ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நடைபெறும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்று வருகின்றன.


  • Share on

தூத்துக்குடியில் 27வது ஆண்டு அகில இந்திய சத்யா கோப்பை மின்னொளி கைப்பந்து போட்டி கோலாகல தொடக்கம்!!

மதியம் 3 மணி வரை உணவு என அறிவிப்பு... ஆனால் 1 மணிக்கே காலியான அம்மா உணவகம்! நோயாளிகள், பொதுமக்கள் அதிருப்தி!!

  • Share on

Trending News