Breaking News

அண்ணாமலையின் We The Leaders இயக்கத்தில் இணைந்த சிவமுருகன் ஆதித்தனுக்கு உற்சாக வரவேற்பு தூத்துக்குடி மாவட்ட ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த முடிவு!!

  • Share on

தமிழ்நாடு பாஜக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த சிவமுருகன் ஆதித்தன், கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் We The Leaders இயக்கத்தில் இணைந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் சார்பில் உமரி எஸ். சத்தியசீலன் தலைமையில் சின்னதங்கம், ராஜேஷ்கனி, பொன்விக்னேஷ், லோபோ உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், We The Leaders இயக்கத்தை மாவட்டம் முழுவதும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தவும், குறிப்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல களப்பணிகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செந்தூர் பாலசுப்ரமணியன், கிருஷ்ணன் அய்யர், முருகேசன், செல்வகணபதி, அழகேசன், சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

ஓட்டப்பிடாரம் ஜமாபந்தியில் 715 மனுக்கள் பெறப்பட்டது; 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு!!

"வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் திமுக ஆட்சியில் அரசியல் தலையீடு; உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டனர்" - வக்கீல் ராஜசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

  • Share on

Trending News