Breaking News

அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

  • Share on

தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு இன்று (14.06.2026) சிறப்பு வழிபாடுகள் மற்றும் யாக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.


வைகாசி மாதம் 31-ஆம் நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் மதியம் 1.30 மணியளவில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகமும், தீபாராதனையும் நடைபெற்றது.


பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் கிட்டுதல், மன அமைதி பெருகுதல், செல்வ வளம் அதிகரித்தல், தீராத நோய்கள் நீங்குதல், கடன் தொல்லைகள் விலகுதல், அரசியலில் முன்னேற்றம் பெறுதல், முன்னோர் சாபங்கள் நீங்குதல், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்தல், முன்ஜென்ம பாவங்கள் அகன்று குடும்பத்தில் ஆனந்தம் பெருகுதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


வழிபாடுகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை, பிரத்தியங்கிரா தேவி பீடம், அய்யனடைப்பு கோரம்பள்ளம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

தொடுவானம் இலக்கிய விழாவில் நூல் வெளியீடு: படைப்பாளர்களுக்கு பாராட்டு குவிந்தது!!

பெண் காவலருக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? – சிவகங்கை சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான ஜெகன் மூர்த்தியார் கண்டனம்!!

  • Share on

Trending News