Breaking News

உலக நலனும் நல்லாட்சியும் வேண்டி காலபைரவர் தேய்பிறை அஷ்டமி மகாயாகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

  • Share on

தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடத்தில், வைகாசி மாதம் 25ஆம் தேதி (08.06.2026) திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகாயாகம் விமரிசையாக நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு சித்தர் பீடத்தின் தலைவர் சீனிவாச சித்தர் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாயாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்ற அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டியும், உலக அமைதி நிலவ வேண்டியும் பக்தர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன பிரார்த்தனை செய்து இறைவனை வேண்டினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர் பீட நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

டாஸ்மாக் கடை அடைப்பு விவகாரம்: ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையும் பாஜக நிர்வாகிகள்; தமிழக ஆட்சியைப் பிடிக்கும் என தூத்துக்குடியில் நம்பிக்கை!!

  • Share on

Trending News