Breaking News

சத்யா கோப்பையை கைப்பற்றிய சென்னை அணிகள்; தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி கோலாகலம்!!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை உற்சாகமாக நடைபெற்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் வருமானவரித்துறை சென்னை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் மோதின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.


பெண்கள் பிரிவில் முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியினருக்கு ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியினருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கினர். ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணியினருக்கு ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணியினருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


  • Share on

உப்பளத் தொழிலை பாதுகாக்க முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பார்; கனிமொழி எம்.பி.க்கு உப்பு உற்பத்தியாளர்கள் கண்டனம்!!

  • Share on

Trending News