Breaking News

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தை வரவேற்று தூத்துக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

  • Share on

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடியில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


"வளர்ந்த பாரதம்" என்ற இலக்குடன் சாமானிய மக்களுக்காக அரசியல் பணியை முன்னெடுக்கப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், இளைஞர்களை அரசியலுக்கு தயார்படுத்தும் நோக்கில் அவர் புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பதை வரவேற்று, தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களையும், இளைஞர்களுக்கான புதிய அரசியல் வாய்ப்புகளையும் உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வில் விந்தியா முருகன், மாதவன், சின்னத்தங்கம், சிலம்பொலி, செல்வி, சந்தனம், ஜமீன் கிருஷ்ணன், வேல்முருகன், துர்கைப்பன், லட்சுமணன், வெங்கடேன பெருமாள், முருகன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மகா யாகம்; பக்தர்கள் திரளாக பங்கேற்பு!!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; உண்மை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை அவசியம் – பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்!!

  • Share on