Breaking News

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்!!

  • Share on

இந்திய திருநாட்டின் இனிய தலைவரும், நாட்டின் எதிர்கால பிரதமராக உருவெடுத்து வரும் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.


தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி அவர்கள் தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகரில் அமைந்துள்ள பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.


நிகழ்வில் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ், மாநகர செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மைக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவு தலைவர் முனியசாமி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெஸ்ஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் செல்வமுருகன், முருகேசன், எஸ்.எம்.டி. சுந்தர்ராஜ், சாந்தகுமார், பாலகிருஷ்ணன், காமராஜ், மாரியப்பன், முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் ஆகியோரும் பங்கேற்று முதியோருக்கு சேவை செய்தனர். ராகுல் காந்தி பிறந்தநாளை சமூக நலப் பணிகள் மூலம் கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


  • Share on

மாணவியரின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் புத்தாக்கப் பயிற்சி!!

  • Share on