சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140-ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7-வது தெருவில் நடைபெற்ற விழாவில், தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து ஆகியோர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நாகராஜ் முன்னிலை வகித்தார். மேலும், மாணவர் சங்க உறுப்பினர் ஆறுமுகம், மணவாளன், மனோகரன், வேல்முருகன், கருணாமூர்த்தி, மாடசாமி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு தியாகியின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசியோர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையையும், அவர்களின் தியாக உணர்வையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.