Breaking News

அண்ணாமலை வழிகாட்டுதலில் ‘வி த லீடர்ஸ்’ உறுப்பினர் சேர்க்கை முகாம்: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இளைஞர்கள் உற்சாக பங்கேற்பு!!

  • Share on

அண்ணாமலையின் ஒப்புதலுடனும் வழிகாட்டுதலின்படியும், ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக நடைபெற்றன. இம்முகாம்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உறுப்பினர்களாக இணைந்தனர்.


இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர மையப் பகுதியில் உள்ள சிவன்கோவில் தேரடி வீதியில் ராஜேஷ்கனி தலைமையில் நடைபெற்றது. முகாமை உமரி எஸ். சத்தியசீலன் தொடங்கி வைத்து பேசுகையில், “அண்ணாமலையின் ஒப்புதலுடனும் அவரது வழிகாட்டுதலின்படியும் இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர்” என்றார்.


இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடங்கி வைத்ததுடன், சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களையும் நேரில் சந்தித்து இயக்கத்தில் இணைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆசை மாதவன், சின்னதங்கம், பால பொய்சொல்லான், விஜய் துர்க்கையப்பன், ஏ.பி. கண்ணன், ஹரிகரசுதன், கார்த்திகை மீனா, பொன்விக்னேஷ், சிலம்பொழி, பலக்குமார், கந்தசாமி, முருகேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேதுவாய்தான் ஊராட்சியில் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நாசரேத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற பொறுப்பாளர் ஜெயலிங்கம், தனது நற்பணி மன்றத்தை கலைத்து அனைத்து உறுப்பினர்களையும் ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைத்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
ஆத்தூர் பேரூராட்சியில் சரவணன் தலைமையிலும், மெஞ்ஞானபுரத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற பொறுப்பாளர் முத்துமாரி தனது மன்ற உறுப்பினர்களுடன் ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்ததையொட்டி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.


அதேபோல் ஆறுமுகநேரி பேரூராட்சியில் சண்முகம், சிவக்குமார், விஜயரகு, ஜெயகுரு ஆகியோரின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளர் தண்டுபத்து ராமகனி இல்லத்தில் இருந்து தொடங்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை இயக்கம் பரமன்குறிச்சி உள்ளிட்ட 15 மண்டலங்களில் விரிவுபடுத்தப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


  • Share on

சத்யா கோப்பையை கைப்பற்றிய சென்னை அணிகள்; தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி கோலாகலம்!!

தூத்துக்குடியில் தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா அனுசரிப்பு!!

  • Share on

Trending News