Breaking News

ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மகா யாகம்; பக்தர்கள் திரளாக பங்கேற்பு!!

  • Share on

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில், ஸ்ரீசித்தர் பீடம் சார்பில் வைகாசி மாதம் 22ஆம் தேதி (05.06.2026) வெள்ளிக்கிழமை தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா யாகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


"சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழித்து வளரவும், பக்தர்களின் வாழ்க்கையில் செல்வ வளமும் நலன்களும் பெருகவும் வேண்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மகா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை வெகுசிறப்பாக நடைபெற்றன.


தொடர்ந்து ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

அண்ணாமலையின் “நாம் தலைவர்கள்” இயக்கம் வளர வாழ்த்து – சத்குரு சீனிவாச சித்தர் ஆசீர்வாதம்!!

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தை வரவேற்று தூத்துக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

  • Share on