இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அங்குள்ள முதியோர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தலைமையில், நகரச் செயலாளர் அருண் பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. ராஜசேகர், எஸ்.எம்.டி.எஸ். ராஜா, ராஜாராம், ஆழ்வார்சாமி, துரைராஜ், வேணுகோபால், சுந்தர்ராஜ் நாயக்கர், திருப்பதி ராஜா, பெத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுடலைமணி, மாரியப்பன், யோகேஷ், கார்த்திகுமார், வேல்சாமி, தாஸ், கோபால் ஆசாரி, தட்சணாமூர்த்தி, ராஜா, பாலகுமார், இ.பி. மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் இயக்கத்தினர் பலரும் பங்கேற்று ராகுல் காந்தியின் பிறந்தநாளை சமூக நலப்பணிகள் மூலம் சிறப்பாகக் கொண்டாடினர்.