Breaking News

ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: ஆதரவற்றோர் இல்லங்கள், சிறப்பு பள்ளிகளில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாநகர் காங்கிரஸ்!!

  • Share on

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர், இன்னாசியார்புரத்தில் உள்ள அன்பு சிறார் இல்லத்தில் மதிய உணவு வழங்கி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


தொடர்ந்து, பிரையண்ட் நகரில் செயல்பட்டு வரும் நல்ல ஆயன் காது கேளோர் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவியர் பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளிப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் காங்கிரஸ் துறை தலைவர் சிமியோன், மகிளா காங்கிரஸ் தலைவி ப்ரீத்தி வினோத், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்ணபாஸ், எஸ்.சி. துறை தலைவர் ஏ.டி. பிரபாகரன், மாநில பேச்சாளர் பார்த்திபன், தென்மண்டல ஊடகப்பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர் கோபால், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், சேவியரம்மாள், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ், ராபின், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் பாத்திமா, இசக்கியம்மாள், வார்டு தலைவர்கள் காமராஜ், மகாலிங்கம், முருகேசன், கிருஷ்ணன், ரூஸ்வெல்ட், தனிஸ்லாஸ், ஜெயபாண்டியன், சகாயராஜ் மற்றும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.


  • Share on

ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசுகள், முதியோர் இல்லத்தில் அன்னதானம்!!

  • Share on