Breaking News

திருச்சியில் திறக்கப்பட இருக்கும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் - முதல்வருக்கு எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் நன்றி!!

  • Share on

தமிழக பட்ஜெட் 2025 - 2026 கூட்டத்தொடர் நேற்று (04.04.2025) நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் :-

2025 - 2026 மானிய கோரிக்கையின் போது எனக்கு பேச வாய்ப்பளித்த சட்ட மன்ற பேரவை துணை தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தியாக தலைவி அன்னை சோனியா காந்தி எம்.பி, சர்வாதிகாரத்தை வீழ்த்தி இந்தியா கட்டிக் கார்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன், கார்கே எம்.பி., இளைய இந்திரா பிரியங்கா காந்தி எம்.பி., அவர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவிற்கே முன்னோடியாக திகழக்கூடிய முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கும் திருச்சியில் திறக்கப்பட இருக்கும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பு செய்த முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற பகுதி பொதுமக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று நேற்று நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் பேசினார்.  

 


  • Share on

வாடகை கட்டிடத்தில் செயல்படும் சுகாதார நிலையங்களுக்கு அரசு சொந்த கட்டிடம் எம்.எல்.ஏ சண்முகையா கோரிக்கை!!

2024 - 2025ம் ஆண்டு (ஏப்ரல் மாதம் வரை) தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம்!!

  • Share on

Trending News