தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து இன்று (02.04.2025) தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை சென்னையில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டேவிட் செல்வின், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கொம்பையா, ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய செயலாளர் பி.ஜி. ரவி, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் கா. சுப்புராஜ், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், சாயர்புரம் நகரச் செயலாளர் கண்ணன், பெருங்குளம் நகர செயலாளர் நவநீதமுத்துக்குமார், ஸ்ரீவை மத்திய ஒன்றிய இளைஞரணி த. காசி சண்முகம், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானார் உடன் கொண்டனர்.

