Breaking News

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை!!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே சவலாபேரியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க சட்டசபையில் எம்எல்ஏ சமூக கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஓட்டப்பிடாரம் சட்டசபை உறுப்பினர் சண்முகையா பேசியதாவது :-

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியானது பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்ததாகும் மேலும் ஆனந்தா ஊராட்சி சவலாபேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த படித்த மாணவ மாணவிகள் டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்காக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆலந்தா ஊராட்சி சவலாபேரி பகுதியை மையமாக வைத்து போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி மீளப் பெறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களின் துணைவியாரின் பெயரில் சொத்துக்கள் இருந்தால் அவர்களுக்கும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சண்முகையா பேசினார்.


  • Share on

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு!!

சிறுபான்மையினருக்கு ரூ. 450 கோடி நிதி : தமிழக முதல்வர் ஸ்டாலின்!!

  • Share on