ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கவும், சாத்தான்குளம் மற்றும் ஏரல் தாலுகாவில் சிப்காட் அமைக்கவும், சட்டசபையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கோரிக்கையில் விடுத்து பேசினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று அவர் பேசியதாவது :-

ஸ்ரீவைகுண்டம் கருங்குளம் மற்றும் ஏரல் பகுதிகளில் சுமார் 11 ஆயிரம் ஏக்கரில் வருடத்திற்கு 50 ஆயிரம் டன் வாழைத்தார் விளைவிக்கப்படுகிறது. அவற்றை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய கோல்ட் ஸ்டோரேஜ் வசதி அல்லது அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக்கி அழகு சாதன பொருட்கள் செய்ய பயன்படுத்தவோ, அல்லது ஊட்டச்சத்து பொருளாக தயாரிக்க அரசு திட்டம் உள்ளதா,

மேலும் குலசேகரன் பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதலும் மற்றும் உடன்குடி அனல் மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து சாத்தான்குளம் தாலுகா எழுவரை முக்கி ஊராட்சி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் பிடாநேரி ஊராட்சி மற்றும் ஏரல் தாலுகா வெள்ளமடம் ஊராட்சிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை சேர்த்து சுமார் 800 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடங்களில் சிப்காட் அமைத்து ராக்கெட் ஏவுதளம் மற்றும் அனல் மின் நிலையம் ஆகியவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க அரசிடம் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா "வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க ஏராளமான நிறுவனங்கள் கேட்டிருக்கின்றன. தேனியில் வாழைத்தார் பதப்படுத்தும் யூனிட் நிறுவ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 50 ஆயிரம் டன் வாழைத்தார் உற்பத்தி இருந்தால் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து சிறு குறு தொழில் அமைச்சரிடம் கூறி சிப்காட் வழியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் எழுவரை முக்கி பிடாநேரி மற்றும் வெள்ளமடம் ஊராட்சிகளில் உள்ள அரசு நிலங்கள் மெயின் ரோட்டில் சற்று தொலைவில் உள்ளது. இருப்பினும் அங்கே சாத்தியக்கூறுகள் இருந்தால் டெக்னோ எக்னாமிக் ரிசல்ட் நல்லபடியாக வந்தால் தொழிற்சாலைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.