மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க வென்றுவிட்டது. திமுக கவுன்சிலர் முதல் முதல்வர் குடும்பத்து பிள்ளைகள் வரை மும்மொழி கல்விக் கொள்கையை பின்பற்றி படித்து வருவதை மக்கள் புரிந்துக்கொண்டுவிட்டனர்.


இதற்கான முழு மதிப்பெண்களும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையே சேரும், என்று அரசியல் விமர்சகர் பத்ரி சேஷாத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி தமிழகப் பதிப்பாளரும், அரசியல் விமர்சகரும் ஆவார். இவர் இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ என்ற பிரபலமான விளையாட்டுத் தளத்தின் நிறுவனர்களுள் ஒருவராவார். இவர் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனரும், தொல்லியல் ஆர்வலரும், கணினித் தமிழ் முன்னோடியும் ஆவார்.