ஏரல் கணேசபுரம் வார்டு 15 பகுதியில் கடந்த சுமார் 120 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட இந்து காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சாதி சான்றிதழ் வழங்கல் பிரச்சனை இதுவரை தீர்க்கப்படாததால், பெரும்பாலான இளைஞர்கள் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாக அதிகாரி (விஏஓ), தாசில்தார் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கனிமொழி கருணாநிதி அவர்களிடம் மனு அளித்தும் எந்தவித தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், ஏரல் கணேசபுரம் மக்கள் சார்பாக ஊர் தலைவர்கள் வேண்டுகோளின் பேரில், மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் AICCTU (All India Central Council of Trade Unions) அமைப்பின் பிரதிநிதிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது, மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா (மக்கள் அதிகாரக் கழகம்), வழக்கறிஞர் தோழர் திரவியம், மற்றும் தோழர் முத்துலிங்கம் (ஏரல் பகுதி செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெற ஏரல் கணேசபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. “மக்களின் கல்வி உரிமை பாதிக்கப்படக்கூடாது. அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தலைவர்கள் வலியுறுத்தினர்.
என்றும் மக்கள் பணியில், தோழர் மின்னல் அம்ஜத் (மாவட்ட தலைவர், AICCTU) தோழர் தாளமுத்து செல்வா (மாவட்டச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்) வழக்கறிஞர் தோழர் திரவியம் தோழர் முத்துலிங்கம் (ஏரல் பகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
தூத்துக்குடி
ஏரல் கணேசபுரம் பகுதியில் சாதி சான்றிதழ் சிக்கலால் இளைஞர்கள் கல்வி இழப்பில் – அதிகாரிகளிடம் மனு கொடுக்க முடிவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் உத்தரவுகளை துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி வழியில் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம் — அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
அடுத்த
மின் கம்பத்தில் ஆபத்தான பியூஸ் கேரியர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்து!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026