இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட தியாகியாக போற்றப்படும் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் 269வது ஜெயந்தி விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் K. பெருமாள்சாமியின் ஆலோசனையின்படி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டாரன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்து கோன் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர தலைவர் K.T.P. அருண்பாண்டியன் மற்றும் வட்டார தலைவர் C. ரமேஷ்மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், INTUC ராஜசேகர், SMTS ராஜா, துரைராஜ், பொறியாளர் ராஜா முத்துராமலிங்கம், சுந்தர்ராஜ், கிருபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாவீரன் அழகுமுத்து கோன் நினைவுச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், நாட்டின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் வீர வரலாறும், தேசப்பற்றும் என்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என வலியுறுத்தினர்.