தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், "நம் நாடார் இன வரலாறு" என்ற தலைப்பில் வரலாற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடார் இன வரலாற்று ஆய்வாளரும், வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான பேராசிரியர் தசரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாடார் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கல்வி முன்னேற்றம் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவரது உரை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகளான அசோகன் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து, பேராசிரியர் தசரதன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் இடையே நாடார் இன வரலாறு, சமூக வளர்ச்சி மற்றும் வரலாற்று ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.



மேலும், வேப்பலோடை பகுதியைச் சேர்ந்த உள்ளூர் எழுத்தாளர் சுயம்புலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, அதற்கான ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வு, வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.