தூத்துக்குடி ரோச் சிறுவர் பூங்காவில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பியூஸ் கேரியர் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பது பொதுமக்களின் கவலைக்குரியதாக உள்ளது. சிறுவர்கள் விளையாடும் இடத்திலேயே அந்த மின் அமைப்பு கைபடும் தூரத்தில் இருப்பது பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது “சிறுவர் பூங்கா என்பது குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடும் இடம். ஆனால் அங்கு மின்சாரம் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பின்றி இருப்பது மிகப்பெரிய அலட்சியம். மின்வாரியமும் தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் மீதான அக்கறையுடன் பேராபத்துகள் ஏற்படாத வகையில் முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

மின்சார துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டால், எதிர்பாராத விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புக்கு:
மின்னல் அம்ஜத்,
மாவட்ட தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்),
தூத்துக்குடி மாவட்டம்.
செல்: 95009 10559.