தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில், ஏசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் இன்று (18.04.2025) சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தவெக சார்பில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், வழக்கறிஞருமான பிரைட்டர் தலைமையில் நீர் மோர், தர்பூசணி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜான் பெர்னாண்டோ, மதன் குமார், பவுல் ராஜ், ரவி, ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.