இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 5ம் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது தவக்காலத்தின் கடைசியில் இயேசு உயிர்நீத்த தினமான இன்று (18.04.2025) புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


இதையொட்டி தூத்துக்குடி தூய பணிமயமாதா ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் இயேசு சிலுவை சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தை சுற்றி பவானியாக எடுத்துவரப்பட்டது. இந்த சிலுவைப்பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

பிறகு சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கலந்து கொண்டு, ஆலயத்தை விட்டு வெளியே வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி, மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கொளுத்தும் வெயிலிலும் கொண்ட கொள்கையில் உறுதியாக சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் பனிமய மாதா ஆலயம் முன்பு நீர் மோர், மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். எந்த கட்சிகளும் நீர் மோர் வழங்க முன்வராத போது கொளுத்தும் வெயிலிலும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க தூத்துக்குடி தவெக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் குளிர்பானங்களை வழங்கியதை கண்டு பொதுமக்களும் மற்றும் மாற்று கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் வெகுவாக பாராட்டினர்.  

அதைத்தொடர்ந்து தஸ்நேவிஸ் பள்ளி அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தோழிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் திரேஸ்புரம் பகுதியில் கழக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தளபதி விஜய்யால் தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பல்வேறு தரப்பட்ட ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கான உதவி, பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் என தொடர்ந்து பல செயல்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கொண்ட கொள்கையில் உறுதி என்ற பழமொழிக்கேற்ப அயராது உழைத்து கொண்டு இருக்கும் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பேசும் பொருளாகி உள்ளார்.



தனக்கென தனி அடையாளத்தை பதிவு செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று பேசும் அளவிற்கு கட்சியின் தலைமை ஆணையின்படி கழகத்தின் அறிவுறுத்தலின்படி, கழக பணிகளை செம்மையன செய்து காட்டுவதில் திறமை மிக்கவர் என்று தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள், மாற்று கட்சியை சார்ந்த நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கூறும் அளவிற்கு கால்பதித்து விட்டார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதற்கேற்ப மாற்று கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கூட தற்போது தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலை பாராட்ட தொடங்கி விட்டனர்.