தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஏப்.18ம் தேதி முதல் 29ம் தேதி வரை முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெறம் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 29,30,31ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் காப்பீடு அட்டை பதிவு செய்திட இன்று மற்றும் நாளை (18,19) ஆகிய இரு தினங்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று (18.04.2025) காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் பொதுமக்களிடம் இருந்து முதல்வரின் மருத்துவ காப்பீட்டுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நிவர்த்தி செய்து அதற்கான காப்பீடு அட்டை பெறுவதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பயனாளிகளிடம் முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளை ஒரு வாரங்களில் சட்ட மன்ற அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.



நிகழ்ச்சியில்  மருத்துவ காப்பீடு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, மாநகர கல்விக்குழு தலைவர், கவுன்சிலர்கள் கனகராஜ், அதிஷ்ட மணி, மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.