பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று (19.04.2025) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் காமராஜ் சிலை அருகில் தெட்சணாமூர்த்தி நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆத்தினார் திருவுருவ படத்திற்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளரும், தொழிலதிபருமான பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.