உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன்பு முத்துநகர் பீச்சில் நடைபெற்ற படகு போட்டி உற்சாகம் மிக்கதாக அமைய, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ், ரெக்ஸ்லின், பிரையன்ட் நகர் செயலாளர் ராமகிருஷ்ணன், திரேஸ்புரம் செயலாளர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியை தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை (21.11.2025) அல்பர்ட் & கோ மஹால் காம்ப்ளெக்ஸில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை வகித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள், பரிசுகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் நகர மீனவரணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், ராபர்ட், ரெக்ஸ்லின், ஸ்மைலன், ஜே. அந்தோணி ராஜ், அந்தோணி ராஜ், சேசையா, மாதவடியான், பெப்பின்காகு, ரமேஷ், குமார், நேவிஸ், ஜெனிபர், நீக்குலாஸ், ராஜா, ஜாண்சன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.
அதேபோல், துணை மேயர் ஜெனிட்டா, பிரையன்ட் திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ்.பி. கனகராஜ், அனந்தையா, மீனாட்சி சுந்தரம், செல்வகுமார், சுந்தரவேல், சேர்மபாண்டியன், முருகேசன், ஏசுவடியான், நாராயணன், மரைக்காயர், சுரேஷ், ராஜ்குமார், மேலும் திரேஸ்புரம் & பிரையன்ட் நகர் மீனவரணி நிர்வாகிகள் இலையன்ஸ், மரியசிலுவை, ஸ்டாரவின், ரீச்சர்ட், ரொபிட்டன், குட்வின் மில்டன், நிஷா, பிரமிலஸ், ஷேக் முகமது, ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இறுதியில் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் உலக மீனவர் தின படகு போட்டி & நலத்திட்ட உதவி விழா சிறப்பாக நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ – விளாத்திகுளம் ஒன்றியத்தில் புதிய சாலைத்திட்டங்களை தொடங்கி குடிநீர் திட்ட ஆய்வும் நடத்தினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026