தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று பல்வேறு ஊரக மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டதுடன், குடிநீர் வசதி தொடர்பான ஆய்வும் நடைபெற்றது.
சூரங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஒரடுக்கு கற்சாலை அமைக்கும் பணிக்கு G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து எம்.குமாரசக்கனாபுரம் கிராமத்தில் ரூ.19.39 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் துவக்கினார்.
பின்னர் வைப்பார் கிராமத்தில் 363 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் செயல்படும் நிலையை ஆய்வு செய்து, குடிநீர் வழங்கல் தொடர்பான அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
நிகழ்வுகளில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் இமானுவேல், சின்னமாரிமுத்து, அன்புராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்பாண்டி, ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரமசிவ பாண்டியன், நல்லமுகமது, ஜவஹர், மாரியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ – விளாத்திகுளம் ஒன்றியத்தில் புதிய சாலைத்திட்டங்களை தொடங்கி குடிநீர் திட்ட ஆய்வும் நடத்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் உலக மீனவர் தின படகு போட்டி & நலத்திட்ட உதவி விழா சிறப்பாக நிறைவு!!
அடுத்த
செந்தமிழன் சீமான் தலைமையில் கூத்தன்குளி பாண்டியபதி திடலில் 'கடலம்மா மாநாடு' – மீனவர் உரிமைகள் முழங்கிய மேடை!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026