உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தூத்துக்குடி வட்டார மகளிர் திட்டம் சார்பில் குமாரகிரி ஊராட்சி சிறுப்பாடு சேவை மையத்தில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கான மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மகளிர் சுயஉதவி குழுக்கள் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நோவா கோவில்பிள்ளை, வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரி, மரிய அமலி, PLF தலைவர்கள் ஜெயமெர்லின், துரை செல்வி, ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.